திருப்பதி பிரம்மோற்சவ சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வெளியீடு
திருப்பதியில் ஏழுமலையான் கோவில் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்தின் போது சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வெளியீடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 19ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 15 ம் தேதி கோவிலை சுத்தம் செய்யும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கட் இதுவரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த டிக்கெட்டுகளை இன்று மாலை 4 மணிக்கு பக்தர்கள் தேவஸ்தான இணையதள முகவரியான https://tirupatibalaji.ap.gov.in/#/login செய்து டிக்கெட் முன்பதிவு செய்யும் விதமாக டிக்கெட் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற கூடிய நாட்களில் சுவாமி வீதிஉலா நடைபெறுவது வரலாற்றில் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் பிரம்மோற்சவத்தின் போது சுவாமி தாயார் எந்தெந்த வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்களோ அந்த வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட உள்ளனர். இந்நிலையில் பிரம்மோற்சவம் நடைபெற கூடிய நாட்களில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Leave a Comment