திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட் தற்காலிக ரத்து....
கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட் இந்த மாதம் முப்பதாம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் தினந்தோறும் மூன்றாயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து திருப்பதி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50 வார்டுகளிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.
பின்னர் 45 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் சனிக்கிழமை மீண்டும் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த மாதம் 30ம் தேதி வரை மீண்டும் தற்காலிகமாக இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக தேவஸ்தான அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு செய்தபிறகு இலவச தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்காக அதிக அளவு தமிழக பக்தர்கள் ஒருநாள் முன்னதாகவே திருப்பதிக்கு வந்து இரவு முழுவதும் காத்திருப்பதாகவும் இதுவே கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக அமையும் என்பதாலும் புரட்டாசி மாதம் 17-ஆம் தேதி முதல் தொடங்க படுவதால் தமிழக பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் முப்பதாம் தேதி வரை தற்காலிகமாக இலவச தரிசன டிக்கெட் நிறுத்தப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Comment