கைலாய வாத்தியம் முழங்க திறக்கப்பட்ட தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன்  கோவில்


கைலாய வாத்தியம் முழங்க 165 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன்  கோவில். திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி வடிவுடையம்மன் கோவில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு இன்று பக்தர் களுக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

 இதனையடுத்து அதிகாலை முதலே பக்தர்கள் கைலாய வாத்தியம் முழங்க வாசலில் நின்று ஓம் நமச்சிவாயா தியாகராயா ஒற்றிஈஸ்வரா  என்ற கோஷங்கள் முழங்க காத்திருந்தனர் பொதுவாக பௌர்ணமி தினத்தில் வடிவுடை அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருவது  வழக்கம். இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக நோய்த்தொற்று நடவடிக்கையாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று பௌர்ணமி என்பதனால் அதிகாலையிலே கூட்டம் நிரம்பி வழிந்தன.  

கோவில் வாசலில் வெப்பமானி கொண்டு உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும் கைகளை சுத்தப்படுத்தி உள்ள செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது அதன் அடிப்படையில் கோவில் வாசலில் அதிகாலை முதலே ஏராளமான கூட்டத்தை கோவில் நிர்வாகம் கட்டுப்படுத்தி ஒவ்வொருவராக உள்ளே அனுமதித்தனர்.



Leave a Comment