விருச்சிகம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கும்


விருச்சிக ராசி அன்பர்களே, 
ராகு உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான விருச்சிகத்திற்கு ஏழாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனால், உங்கள் துணையுடனான உறவில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்தக் காலகட்டத்தில், உங்கள் இருவருக்கும் இடையே சிறு பிரச்சினைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு உள்ளது. 

ஆனால் இவை பெரிதாகாமல், நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே எந்தக் காரணத்திற்காகவும் உங்கள் துணை அல்லது துணைவருடன் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். இதற்கு பதிலாக, நீங்கள் அவரிடம் கொண்டுள்ள அன்பையும், அக்கறையையும், இந்த நேரத்தில் தாராளமாக வெளிப்படுத்துங்கள். தவிர, இப்பொழுது உங்கள் தொழில் திடீரென்று மேம்பட்டு, உச்ச நிலைக்குச் செல்லும் வாய்ப்புள்ளது ஆனால், இது போலவே, அது திடீரென இறங்கி விடவும் வாய்ப்புள்ளது. 

எனவே உங்கள் தொழில் சார்ந்த நடவடிக்கைகளை நீங்கள் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் வணிகப் பரிவர்த்தனைகள் குறித்தும் கவனம் தேவை. எனவே தொழிலில் ஸ்திரத்தன்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தொழில் பரிவர்த்தனைகள் அனைத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 

எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொதுவாகவே, பிறருடன் பழகும் பொழுது நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம் இது. தவிர, இப்பொழுது உங்கள் உடமைகளும் தொலைந்து போக வாய்ப்புள்ளதால், சிறிதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவற்றை நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது அவசியம். எனினும், உங்களில் சிலர், அயல்நாடுகள், அங்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றவற்றினால், சுமாரான ஆதாயங்களைப் பெற முடியும்.  

கேது உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

கேது பகவான், இப்பொழுது, உங்கள் சொந்த ராசியான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, நீங்கள் உங்கள் பாதையில் தடைகளையும், கஷ்டங்களையும் சந்திக்க நேரலாம். பொதுவாக இந்தக் காலக் கட்டம் உங்களுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இல்லாத காரணத்தினால், நீங்கள் உங்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, மிக அவசியம். முக்கியமாக உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவைப்படலாம்.  

இந்த நேரத்தில், இவ்வாறு உங்கள் உடல்நிலையைக் கவனித்துக் கொள்வதையே, உங்கள் முக்கியக் கடமையாகக் கொள்ளுங்கள். குறிப்பாக, உங்கள் தலைப் பகுதியில் அதிக அதிக கவனம் தேவை. வாழ்க்கையின் மற்ற துறைகளிலும் நீங்கள் தடைகளைச் சந்திக்க நேரிடலாம். மேலும், பிறருடன் நீங்கள் பழகுவது, அவர்களிடன் உங்கள் அணுகுமுறை போன்றவற்றிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இப்பொழுது எதையும் யதார்த்தமாக அணுகுங்கள. மற்றவர்களது நம்பகத்தன்மையை அதிகமாகவோ, குறைத்தோ மதிப்பிட வேண்டாம். தவிர, இப்பொழுது மற்றவர்களின் கண்களுக்கும் நீங்கள் உற்சாகம் இழந்தும், களையிழந்தும் காணப்படலாம். 

உங்களில் சிலரது ஆளுமைக் குணங்களில் மாற்றமும் ஏற்படலாம். இது நல்ல மாற்றமாக இருக்குமாறு மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தக் காலகட்டத்தை, சமய, ஆன்மீக ஈடுபாடுகளை வளர்த்துக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது, வாழ்க்கைப் பிரச்சினைகளை நீங்கள் வெற்றி கொள்ள உதவும். பொதுவாக, கடவுள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள், பிரார்த்தனைகளிலும் நம்பிக்கை கொள்ளுங்கள். இது, நீங்கள்  தன்னம்பிக்கையுடனும், அதிகாரத்துடனும் இருக்க உதவும்.  

நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்



Leave a Comment