கன்னி ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி யோகம் தருமா?
கன்னி ராசி அன்பர்களே,
ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!
ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான கன்னிக்கு ஒன்பதாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு, ஓரளவு சோதனையான காலமாக அமையக்கூடும். இப்பொழுது, உங்கள் தந்தையுடனான உறவில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அவருடைய ஆரோக்கியமும் உங்களுக்குக் கவலை தரலாம்.
மேலும், இந்த நேரத்தில் பொதுவாக நீங்கள், வயதில் மூத்தவர்களுடன் நல்லிணக்கத்தைப் பராமரித்து, அவர்கள் ஆசிகளைப் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் குரு அல்லது ஆன்மீக போதகர் மற்றும் மத குருமார்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதும் உங்களுக்கு நன்மை தரும். எந்தக் காரணத்தைக் கொண்டும், ஒரு பொழுதும், அவர்களை அவமதித்து விடாதீர்கள். அலுவலகத்தில் உங்கள் மூத்த அதிகாரியுடனான உறவு அவ்வளவு சீராக இருக்காது. நீங்கள் தான் இதை மேம்படுத்தி, நல்லுறவாக்கி, அதற்கு வலிமை சேர்க்க வேண்டும்.
அதிர்ஷ்டமும் கூட இப்பொழுது உங்களுக்கு, அதிக அளவு சாதகமாக இருக்காது. நீங்கள், ஒழுக்கம் மற்றும் ஒழுக்க நெறிகளில் இருந்து வழுவாமல், உங்களைத் தற்காத்துக் கொள்வது அவசியம். உங்கள் நீதிக்கும் நேர்மைக்கும் இப்பொழுது சோதனைக் காலம் என்பதால், நீங்கள் உங்கள் எண்ணங்களிலும், செயல்களிலும் நேர்மையாக இருக்க முயற்சி செய்வது மிகவும் முக்கியம். இந்தப் பெயர்ச்சியின் விளைவுகள் உங்களை பாதிக்காமல் இருப்பதற்கு, மனதில் இறை பக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கடவுளை வணங்குங்கள். எனினும், இந்தப் பெயர்ச்சிக் காலத்தின் பொழுது, வெளிநாட்டுப் பயணங்கள் எளிதில் அமையும் வாய்ப்புள்ளது.
கேது உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!
கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான கன்னிக்கு மூன்றாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தக் காலகட்டத்தில் அவர் உங்களுக்கு, நன்மை மற்றும் தீமை கலந்த பலன்களை அளிப்பார் என எதிர்பார்க்கலாம். ஜோதிடம், இசை, பாடல், நடனம், மற்றும் உளவியல் போன்ற ஆன்மீகம் அல்லது கலைத் துறைகளில் இருப்பவர்கள், அவற்றில் மிகவும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் வாய்ப்புள்ளது.
எனினும், இந்த நேரத்தில் உங்கள் தைரியம் சற்று குறையக்கூடும். எனவே நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது அவசியம். மற்றவர்களுடனான உங்கள் உரையாடலின் பொழுது, நீங்கள் கவனமாக இருந்தால் தவறான புரிந்துணர்வுகளைத் தவிர்க்க இயலும். எனவே பேசுவதற்கு முன் நன்கு யோசித்துப் பேசுவது நல்லது. மேலும், சுருக்கமாகவும், குறிப்பாகவும் பேசுவதும், பிறருடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும்.
உங்கள் இளைய உடன் பிறப்புக்களுடன் உள்ள உறவில் சில சிக்கல்கள் எழும் வாய்ப்புள்ளதால், அவர்களுடன் இணக்கமான உறவை மேற்கொள்வது அவசியம். இந்த நேரத்தில், உங்களில் சிலர் குறுகிய பயணங்களை மேற்கொள்ளலாம். இவை குறிப்பாக, ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு மேற்கொள்ளும் யாத்திரைகளாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், கடவுள் மீது நீங்கள் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கை, இந்தக் கால கட்டத்தில், அவரது ஆசிகளைப் பெற்றுத் தந்து, இந்தப் பெயர்ச்சியினால் விளையும் பாதக விளைவுகளைச் சமாளிக்க உதவும்.
நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்
Leave a Comment