விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கருப்பட்டி பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - 50 கிராம்
முந்திரிப் பருப்பு - 30 கிராம்
காய்ந்த திராட்சை - 30 கிராம்
சுக்கு பொடி - சிறிதளவு
ஏலக்காய் - 6
சிறிய தேங்காய் - 1
நெய் - 200 கிராம்
கருப்பட்டி - 600 கிராம்
தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் கருப்பட்டியை நன்றாக தூளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் ஒரு கிண்ணம் அரிசிக்கு 3 மூன்று பங்கு தண்ணீர் விட்டு பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை போட்டு சாதமாக குழையவிடவேண்டும்.
தொடர்ந்து குக்கரில் பிரஷர் போனதும் குக்கரை திறந்து அதில் தூளாக்கி வைத்துள்ள கருப்பட்டியை போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து ஒன்றாக திரண்டதும், வாணலியில் சிறிது நெய்யைவிட்டு அதில் முந்திரிப் பருப்பு, திராட்சைப் பழம், துருவிய தேங்காயைப் போட்டு வறுக்க வேண்டும்.
தேங்காய் பொன்னிறமாக வதங்கிய பின் கலவையை குக்கரில் போட்டு ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, மீதமுள்ள நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.
Leave a Comment