சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஆவணி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட அற்புத காட்சி.....
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் வரை திறந்திருக்கும் நிலையில் இன்று காலை தலைமை தந்திரி சுதீர் நம்பூதரி கோயிலைத் திறந்து பூஜைகளைத் தொடங்கினார். ஐந்து நாள் மாதாந்திர பிரார்த்தனைகள் மலையாள மாதமான சிங்கத்தில் நடைபெறுவது வழக்கம். மாத பூஜைக்குப் பிறகு ஆகஸ்ட் 21அன்று மாலை கோயில் மூடப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஆவணி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட அற்புத காட்சி.....
Posted by shakthionline.com on Monday, August 17, 2020
முன்னதாக, இந்த ஆண்டிற்கான பக்தர்கள் வருகை செயல்முறை குறித்த உயர்மட்டக் கூட்டம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற்றது. சபரிமலை கோயிலுக்கு இந்த ஆண்டு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, கோவிடுக்கு எதிர்மறையான சான்றிதழை கண்டிப்பாகக் கொண்டிருக்க வேண்டும் என உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு தெரிவிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் காவல்துறையின் மெய்நிகர் வரிசை மேலாண்மை அமைப்பு மூலம் நுழைவு கட்டுப்படுத்தப்படும். இதனால் அதிக அளவு கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும்.
Leave a Comment