சபரிமலையில் நவம்பர் 16 முதல் தரிசனம்.... இந்த சான்று அவசியம்!!


சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நடப்பாண்டின் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி நவம்பர் 16-ந் தேதி நடை திறக்கப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நடப்பு மண்டல மகர விளக்கு சீசனில் சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு அனைத்து வழிபாட்டு நடைமுறைகளும் பின்பற்றப்படும். இணையதளம் வழியாக முன்பதிவு செய்து வருபவர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளிக்கப்படும். கொரோனாவை முன்னிட்டு சன்னிதானம், பம்பை நிலக்கல் ஆகிய இடங்களில் கூடுதல் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பான மருத்துவ வசதிகள் பக்தர்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை தரிசனம்: புதிய விதிமுறைகள் 

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பம்பாவிற்கும் நிலக்கல்லுக்கும் இடையே அதிக KSRTC பேருந்துகள் இயக்கப்படும்.

சபரிமலை கோயிலுக்கு இந்த ஆண்டு வரும் பக்தர்கள் COVID-19 பரிசோதனை செய்துகொண்டு, கோவிடுக்கு எதிர்மறையான சான்றிதழை கண்டிப்பாகக் கொண்டிருக்க வேண்டும்.
 



Leave a Comment