திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவிலில் கூழ் வார்த்தல்...


சென்னை அருகே திருமுல்லைவாயிலில் இருக்கும்  பழமையான திருத்தலங்களில் ஒன்று பச்சையம்ன் கோவில். 

பச்சையம்மன் இங்கு தனி தர்பாரில் அமர்ந்து அகிலத்தையே ஆள்கிறாள். பக்தர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணை அழைப்பதுபோல ‘பச்சைம்மா...பச்சைம்மா...’ என்று கூப்பிடும்போது ஓடி வந்து அணைத்துக் கொள்கிறாள். பச்சை நிறம் பொதுவாக படைப்பை குறிக்கும் நிறமாதலால் இங்கு இவள் படைப்பாற்றலை பெருக்கி அருளும் வல்லமையை கொண்டிருக்கிறாள். இதுதவிர குழந்தைப்பேறு, வேலை என்று ஆயிரக்கணக்கான மக்கள் இவளிடம் வேண்டி நிற்கின்றனர்.

 

அத்தகைய சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் தற்போது ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்துவாரங்களுக்கு நடைபெறும் இத்திருவிழாவில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. எப்போதும் வெகுவிமர்சையாக பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடு இப்பதால் எளிமையாக நடத்தப்பட்டது. 



Leave a Comment