கோமாதாவின்  உடற் பகுதியில் உறையும் தெய்வங்கள்....


கோமாதாவின்  உடற் பகுதியில் உறையும் தெய்வங்களைப் பற்றியும், தேவகணங்களைப்  பற்றியும் நமக்கு தெரிந்த சில ,தெரியாத பல செய்திகளைத் தெரிந்துக் கொள்வோம்.

கோமாதாவின்  முகம் மத்தியில்  -சிவன்

 வலக் கண் - சூரியன்

இடக் கண் – சந்திரன்

மூக்கு வலப்புறம் – ஆறுமுகக் கடவுள் முருகன்

மூக்கு இடப்புறம் – முழு முதற்கடவுள் விநாயகர்

காதுகள் - அஸ்வினி குமாரர்

கழுத்து மேல்புறம்  - ராகு

கழுத்து கீழ்புறம்  -கேது

கொண்டைப்பகுதி –நான்முகன்  பிரம்மா                    

 முன்கால்கள் மேல்புறம் – கலைமகள் சரஸ்வதி, சங்கு சக்ரதாரி விஷ்ணுபகவான்

 முன்வலக்கால் -  பைரவர்      

முன் இடக்கால் -  சல்லின் செல்வர் ஹனுமார்

 பின்னங்கால்கள் -  பராசரர், விஷ்வாமித்திரர்

 பின்னகால் மேல்பகுதி - நாரதர், வசிஷ்டர்

பிட்டம் கீழ்ப்புறம் -  கங்கை

பிட்டம் மேல்புறம் – திருமகளான லக்ஷ்மி

முதுகுப்புறம் - பரத்வாஜர், குபேரர் வருணன்,அக்னி  

வயிற்றுப்பகுதி - ஜனககுமாரர்கள் பூமாதேவி

வால் மேல் பகுதி - நாகராஜர்

வால் கீழ்ப்பகுதி - ஸ்ரீமானார்

வலக்கொம்பு - வீமன்

இடக்கொம்பு – இந்திரன்

முன்வலக்குளம்பு - விந்தியமலை

முன்இடக்குளம்பு - இமயமலை

பின் வலக்குளம்பு - மந்திரமலை

பின் இடக்குளம்பு -த்ரோணமலை

பால்மடி - அமுதக்கடல்

முப்பத்துமுக்கோடிதேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்டவசுக்களும்,நவக்கிரகங்களும் ஆட்சி செய்யும் பசுவை காலையில் எழுந்ததும் தொழுவத்தில் காண்பது சுபசகுனமாக கருதப்படுகிறது.
 



Leave a Comment