சாளக்ராமக்கல்.... மகிமை தெரியுமா உங்களுக்கு?
சாளக்கிராமம் என்பது தெய்வீகம் நிறைந்த ஒரு கல் ஆகும். இது பூஜிக்கத் தகுந்த ஒரு பொருள். இது மகாவிஷ்ணுவின் உருவங்களில் ஒன்று. இமயமலைக்கு அருகே உள்ள கண்டகி நதியில் மட்டுமே சாளக்கிராமம் உற்பத்தியாகிறது. இது எல்லோருக்கும் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும்.
பூமியிலிருந்து சுமார் 15000 அடி உயரத்தில் உள்ள இரு மலைக் குன்றுகளின் கற்கள், வஜ்ரகிரீடம் என்னும் பூச்சிகளால் துளையிடப்பட்டு, மலை நடுவிலிருந்து வெளியாகும் கண்டகி நதியின் வழியாக வெளிவருவதே சாளகிராமக்கல்.
இந்த கல்லில் 14 உலோகங்களின் ஒட்டுமொத்த சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபாடு செய்வதற்காக சாளக்கிராமங்களை ஞானம் பெற்ற பெரியவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு.
ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமணன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரெண்டு கூறுகளாக கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். வைணவப் பெரியோர்கள். சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம்.
வீட்டில் இந்த சாளக்ராமக் கல் வைத்திருந்தால் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் என்று தெரியுமா? வைதீக முறைகளை அதிகமாகப் பின்பற்றுகின்ற குடும்பங்களில் நிச்சயமாக இந்த சாளக்ராமக் கல் வைத்திருப்பார்கள். இதை வீட்டில் வைத்து மிகவும் உயர்ந்ததாகக் கருதிப் பூஜிப்பார்கள்.
இது பார்ப்பதற்கு உருண்டை வடிவத்திம் தொட்டுப் பார்த்தால் மிக மிக மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். இந்த கல் கறுப்பு நிறத்திலும் அல்லது சிவப்பு நிறத்திலும் என இரண்டு நிறங்களில் காணப்படும்.
Leave a Comment