திருத்தணி ஆடிக்கிருத்திகை திருவிழா யூடியுப் நேரலையில்.....
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவிற்கு பக்தர்கள்; வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. யூடியுப் வழியாக பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் திருவிழாவை நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்டதிலுள்ள வழிபாட்டு தலங்கள்; கடந்த நான்கு மாதங்களாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. திருத்தணி மலைக்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தொன்றுதொட்டு ஆடிக்கிருத்திகை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும், இவ்வாண்டு கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் பொருட்டு திருக்கோவில் வளாகம் மூடப்பட்டு பக்தர்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆகம விதிகளின்படி வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இத்திருவிழா நடைபெறுவதை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காணும் பொருட்டு https://tiruttanigaimurugan.org, https://tnhrce.gov.in ஆகிய இணையதளங்களிலும், திருக்கோவில் யூடியுப் (YouTube) அலைவரிசையில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரடி திருக்கோவில் தரிசனம் பொதுமக்களின் வருகை இரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவிக்கிறார்.
Leave a Comment