காரைக்கால் அம்மையாரின் திருக்கல்யாண வைபவம்....வீடியோ காட்சி


பிரசித்தி பெற்ற காரைக்கால் மாங்கனி திருவிழாவையொட்டி கைலாசநாதர் ஆலயத்தில் நடைபெற்ற அம்மையாரின் திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் இன்றி எளிய முறையில் சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்தள்ளது பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வழக்கமாக லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

ஆனால் இவ்வாண்டு கோவிட்-19  ஊரடங்கு காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளும் மிக எளிமையாக பக்தர்கள் இன்றி ஆலயத்தின் உள்ளேயே நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பெயரில் ஆலய அறங்காவல் குழுவினர் அறிவித்திருந்தனர். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. 

இவ்விழாவையொட்டி இன்று காரைக்கால் அம்மையாருடைய வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் அவரது திருக்கல்யாண வைபவம் எளிமையான முறையில் சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓதி திருமணம் செய்து வைத்தனர். 

 

இந்த நிகழ்ச்சியில்  பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் சிவாச்சாரியார்களின் உதவியாளர்களும் ஆலய சிப்பந்திகளுடன் எளிய முறையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.  

இவ்விழாவில்  சமூக இடைவெளி பின்பற்றியும் முக கவசம் அணிந்தும் திருக்கல்யாணத்தில் பங்கேற்று காரைக்கால் அம்மையாரை தரிசித்தனர். மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி இறைத்தல் நிகழ்வு நாளை மறுநாள் (ஜீலை 04-ம் தேதி) நடைபெற உள்ளது. 

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்துள்ளது. பக்தர்கள் ஆலயத்தில் நடைபெறும் இந் நிகழ்வுகளை நேரடியாக தங்களின் வீடுகளில் இருந்து  இணையதளம் *http://www.karaikaltemples.com* யூடியூப்:- *karaikal temple* மூலம் நேரடியாக சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment