திருப்பதியில் ஒரு நாளுக்கு 12,750 பக்தர்கள் அனுமதி 


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 17 நாட்களாக சோதனை அடிப்படையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் 800 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதனால், நாளொன்றுக்கு 12,000 பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதில், சர்வ தரிசனத்தில் 3,000 பக்தர்களும், 300 ரூபாய் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களில் 9,000 பேருக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

அதன் படி, ஆன்லைனில் நாளொன்றுக்கு மூன்று ஆயிரம் 300 ரூபாய் டிக்கெட்டுகளும் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் ஆகிய கெஸ்ட் ஹவுஸ்களில் அமைக்கப்பட்டிருக்கும் கவுண்டர்களில் 3 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

 சுமார் 6000 பக்தர்கள் வரை தற்போது தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் இன்று முதல் 12,750 பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஜூன் 30 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 300 சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Leave a Comment