பூஜை செய்யும்போது மணி அடிப்பது ஏன்? 


கோயில்களில் மட்டுமல்லாது, வீட்டிலும் பூஜை செய்யும் போது மணி அடிப்பது ஏன் என்று தெரியுமா? 

பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டில் ஏதாவது துர் தேவதைகள் போன்றவை இருந்தால் அது வெளியே ஓடி விடும். துர்தேவதை போன்ற தீய சக்திகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம். 

அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் ஒரு வேளை வந்து விடலாம். 

தினமும் மணி அடிப்பதால் அந்த மணியோசை,  துர்சக்திகளை முற்றிலுமாக விரட்டியடிப்பதோடு மட்டுமில்லாமல், தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம்.

இந்த பூஜா மணியின் அதிதேவதை வாசுதேவர். மணியின் நாக்குக்கு அதிதேவதை சரஸ்வதி. அடித்தல் அல்லது ஒலித்தலுக்கு அதிதேவதை சூரியன். நாதத்துக்கு அதிதேவதை ஈஸ்வரன். எனவே , மணிக்கும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். 
 



Leave a Comment