மூன்றாம் பிறையை தரிசிக்கும் முறை...
ஒரு தாம்புள தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதில் குலவிளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து ( வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்,) ஏற்றி வணங்க வேண்டும்.
அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம்,அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும், தேவையை கேட்க வேண்டும், இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு, தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும்.
இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார். இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள். பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு. நகை. தானியம். மாங்கல்யம். இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள்.
தவறாக புரிந்து கொண்டவர்கள் காட்டிய வழி இன்றும் கையாளப்படுகிறது , கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ம பலம் . மனதிலே அன்பு பலம் இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார்.
சூரியனிடமும். சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும். அதுவே யாசகம் பெருவது . ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார், சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார். இதை படி அளப்பது என்பார்கள்.
எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள், செல்வ சந்தோஷ வளம் கிட்டும்,வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும், பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு. தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும்.
இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நலம், ஆயுளுக்கும் செய்து வந்தால் தரித்திரனும். அவனிருக்கும் போதே உயர்ந்த செல்வத்தை பெறுவான் இது உறுதி.மேக மூட்டமாக உள்ள காலங்களில் பிறை தெரியாது , எனினும் கவலை இல்லை , மாலை 6 1/2 மணி முதல் 7 1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை பார்த்து கூறிய முறைப்படி வழிபட்டால் போதும், நலம் பயக்கும்,பிறை தரிசனம் செய்யும் போது நிதான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும், குறிப்பாக சந்தோஷ மன நிலையில் பிறையை காண வேண்டும்.
என்ன மனநிலையில் நாம் பிறையை காண்கிறோமோ அதுவே வரமாக நமக்கு பெருகி கிடைக்கும், எனவே நல்ல மனதோடு தேவைகளை கேட்க வேண்டும்,அசைவ உணவை விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காணும் நாளில் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள்,இந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு.
அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும். அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும்.திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும்.
திருமணம்ஆகாதவர்கள் பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும், சூழ்நிலையால் முடியாதவர்கள் தனித்து நின்றும் வழிபடலாம், இந்த பிறை தரிசனம் காண ஆண்.பெண் பேதமில்லை, யாருக்கு செல்வம். சந்தோஷம். கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும்.ஓரிரு முறை தரிசனம் கண்டும் இன்னும் எதுவும் கிடைக்கவில்லையே என நினைக்காமல் பொறுமையாக வழிபட்டு வரவேண்டும்.
அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு இறைவன் யோகத்தை அருளுவார், எனவே பொறுமையாக உண்மையாக வழிபட்டு வரவேண்டும், சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே கிடைத்து விடும், சிலருக்கு 12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன் தான் பலன் கிடைக்கும்.
Leave a Comment