சூரிய கிரகணம் எந்த நேரத்தில் நிகழும்? எங்கெல்லாம் தெரியும்?


நாளை நிகழ இருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் மிக நீண்ட சூரிய கிரகணமாக அமையும். இனி இப்படி ஒரு நீண்ட சூரியகிரகணம் அமைய 21 வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும்.  

இந்திய நேரப்படி காலை 9:15 மணிக்கு படிப்படியாக தொடங்கி மதியம் 3:05 மணிக்கு சூரிய கிரகணம் முடிவடையும். கிரகணம் உச்சம் அடையக் கூடிய நேரம் நண்பகல் 12:18 மணி. கிரகணம் மொத்தம் 3 மணி 33 நிமிடங்கள் நீடிக்கிறது.

இந்த கிரகணம் உலகில் முதலாவதாக 9.15.58 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் இந்த சூரிய கிரகணம் காலை 10:15:32 மணிக்கு சேலத்தில் தொடங்குகிறது. சென்னையில் 10:21:45 மணிக்கும் , கோவையில் 10:12 மணிக்கும், மதுரையில் 10:17:05 மணிக்கும் திருச்சியில் 10:18:20 மணிக்கும் கிரகணத்தைப் பார்க்கலாம். சூரிய கிரகணத்தை வெற்று கண்களால் பார்க்கக்கூடாது. 



Leave a Comment