சகல ஐஸ்வரியங்களும் தரும் 'நெருப்பு வளைய'  சூரிய கிரகணம்....


பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் நிலவு சுழலும்போது, அதன் நிழல் சூரியன் மீது விழும். மூன்றும் நேர்கோட்டில் வரும் அதுவே சூரிய கிரகணம்.

சூரியனை நிலவு மறைக்கும்போது அதைச் சுற்றி ஏற்படும் ஒளி வட்டம், 'நெருப்பு வளையம்' என்று கூறப்படுகிறது.

மேற்காப்பிரிக்கா, இந்தியா, தென் சீனப் பகுதிகளிலிருந்து பல ஆண்டுகள் காணாத 'நெருப்பு வளைய' சூரிய கிரகணத்தை நாளை காணலாம். முழுக் கிரகணம் சுமார் 38 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். பூமியின் மேற்பரப்பில் 2 விழுக்காட்டில் மட்டுமே கிரகணம் தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் வரும் சூரிய கிரகணம் மிக மிக விசேஷமானது என்கிறார்கள். இந்த கிரகணத்தின் போது, தானங்கள் செய்வதும் பூஜைகள் மேற்கொள்வதும் பிரார்த்தனை செய்வதும் மும்முடங்கு பலன்களைத் தரும் என்கிறார்கள்.

அதாவது, ஞாயிற்றுக்கிழமையும் சூரிய கிரகணமும் இணைந்து வருவது எப்போதோ நிகழக்கூடியது. நாளைய தினம் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 10.20 மணிக்குத் தொடங்குகிற சூரிய கிரகணமானது, மதியம் 1.40 மணிக்கு நிறைவுறுகிறது. இந்த நேரத்தில், இறை பற்றிய சிந்தனையில் இருப்பதே உத்தமம். வீட்டில் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு, தெரிந்த ஜபங்களைச் சொல்லலாம். 

காலையில் எழுந்ததும் வழக்கமாகக் குளித்து வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு பின்னர், காலை 10.20 மணியில் இருந்து வீட்டில் ஓரிடத்தில் கிழக்கு முகமாக அமர்ந்துகொண்டு, தெரிந்த மந்திரங்களை, ஸ்லோகங்களை, பக்திப் பாடல்களை, சஷ்டி கவசம் முதலானவற்றை பாராயணம் செய்துகொண்டே இருக்கலாம்.

பின்னர், 1.40 மணிக்கு கிரகணம் முடிகிறது. முடிந்ததும் குளிக்கவேண்டும். பெண்கள் அவசியம் தலைக்குக் குளிக்கவேண்டும். குளித்துவிட்டு, மீண்டும் விளக்கேற்ற வேண்டும். ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, நமஸ்கரித்துவிட்டு, பின்னர் சாப்பிடவேண்டும். 
 



Leave a Comment