சூரிய கிரகணம் எந்த ராசிக்கு நன்மையை தரும்... 


​மேஷ ராசிக்கு 3 ஆம் இடத்தில் உள்ள மிதுனத்தில் இருக்கும் மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் கிரகணம் ஏற்படுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் செல்வத்தின் பலாபலன்களைப் பெறப்போகின்றனர். 

உடன்பிறந்தவர்களால் நன்மையும், எந்த ஒரு காரியத்தை செய்து முடிக்கும் தைரியம் மற்றும் நீங்கள் அதை செயல்படுத்தும் விதம் ஆகியவற்றை முன்னேற்றும். 

இந்த சூரிய கிரகணத்தால் உங்களின் ஆளுமை மேம்பட்டு உங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். சூரிய கிரகணம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்குத் தீங்கு விளையாது.

சிம்ம ராசியின் 11 வது வீட்டில் சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த சூரிய கிரகணம் உங்கள் ராசிக்கு பணம் மற்றும் உயர்வை வழங்கும். 

நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் காரியங்களும், முழுமையற்ற பலனைத் தந்து கொண்டிருக்கும் செயல்கள் சிறப்பாக நிறைவேற்றப்படலாம். 

சூரிய கிரகணத்தின் விளைவு உங்கள் ராசிக்கு உறவினர் மற்றும் நண்பர்களுடனான உறவு முன்பைவிட வலுவாக மாறும். பொருளாதார அடிப்படையில் கூட உங்களுக்கு மிக உயர்வான நிலை இருக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த கிரகணம் உங்கள் ராசிக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

மீன ராசிக்கும் 4ம் வீட்டில் இந்த சூரிய கிரகணம் நிகழ்வதால் நல்ல பலன்கள் தரக் கூடியதாக இருக்கும். குடும்ப விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. கிரகணத்தின் விளைவாக உங்கள் செயலில் நல்ல சுப பலன்கள் கிடைக்கும்.

எந்த நடவடிக்கைகளிலும் சிறந்த சாதனை பெறுவீர்கள். உங்கள் நிலுவையில் உள்ள பல பணிகளை இந்த நேரத்தில் முடிக்க முடியும். கிரகணம் வணிகர்களுக்கும் வேலை செய்யும் மக்களுக்கும் ஒரு நல்ல முன்னேற்றம், லாபத்தை தரக் கூடியதாக இருக்கும். சூரிய கிரகணத்தின் விளைவுகள் உங்களுக்கு உடல்நலப் பிரச்சினையை ஏற்படுத்தும்


துலா ராசிக்கு 10ம் வீட்டில் நடக்க உள்ள கிரகணம் நேர்மறையான விளைவைக் கொடுக்க உள்ளது. இது தொழில் மற்றும் வேலையைக் ஸ்தானத்தைக் குறிக்கிறது. இதனால் உங்கள் வேலை மற்றும் தொழிலில் செயல்திறன் கூடும். அதன் காரணமாக நீங்கள் உயர் பதவி, தொழில் முன்னேற்றம் பெறக்கூடும். இது உங்கள் தற்போதைய வாழ்க்கை முறைக்கும் பயனளிக்கும். இது மட்டுமல்லாமல், உங்கள் காதல் வாழ்க்கையிலும் சாதகமான மாற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் மனைவியுடனான அன்பு முன்பை விட நெருக்கத்தைக் காண முடியும்.
 



Leave a Comment