செவ்வாயால் உண்டாகும் சொத்து பிரச்னைகள் தீர...
செவ்வாய் கிரகத்தின் அம்சங்கள்
கிழமை : செவ்வாய்
தேதிகள் : 9, 18, 27.
நட்சத்திரம் : மிருகசீரிஷம்,
சித்திரை, அவிட்டம்.
ராசி : மேஷம், விருச்சிகம்.
உச்சம் : மகரம்
நீச்சம் : கடகம்
நிறம் : சிவப்பு
தானியம் : துவரை
ஆடை : சிவப்பு
ரத்தினம் : பவளம்
வழிபாடு - பரிகாரம்
செவ்வாய்க்குரிய கடவுள் முருகப் பெருமான். எல்லா முருகன் ஸ்தலங்களும் செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். அறுபடை வீடுகளுக்கு சென்று முருகப் பெருமானை வணங்குவதால் செவ்வாயால் உண்டாகும் பிரச்னைகள் விலகும். பழநியில் தண்டாயுதபாணி செவ்வாயாகவே அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் முக்கிய பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பும் பின்பும் இங்கு வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.
நவதிருப்பதிகளில் திருக்கோளூர் செவ்வாய் ஸ்தலமாகும். இத்தலத்தில் உள்ள பெருமாளை தரிசிப்பதால் சொத்து பிரச்னைகள், சகோதர பிரச்னைகள், ரத்த சம்பந்தமான நோய்கள் தீரும். தினமும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ், முருகன் துதிப்பாடல்களை பாடி முருகனையும் செவ்வாய் எனப்படும் அங்காரகனையும் வணங்கி வழிபட்டால் தோஷங்கள், தடைகள் நீங்கி சற்புத்திர யோகமும், பூமி பாக்யமும் கிடைக்கும்.
Leave a Comment