ஸ்ரீ காளகஸ்தியில் வரும் 17ஆம் தேதி முதல் ராகு கேது பூஜைகள்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தியில் 17ஆம் தேதி முதல் ராகு கேது பூஜைகள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி தென்கைலாயமாக அழைக்கப்படும் வாயு தலமாக சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை தாயார் கோயிலில் கடந்த 85 நாட்களாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது பக்தர்களை அனுமதிக்கும் விதமாக கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட உள்ளூர்ப் பொதுமக்கள் மற்றும் தேவஸ்தான பணியாளர்கள் மூலம் சோதனை முறையில் தனிமனித இடைவெளியுடன் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செயல் அலுவலர் சந்திரசேகர் ரெட்டி கூறுகையில் பக்தர்களுக்கு வரும் 17 ம் தேதி முதல் ஸ்ரீ காளஹஸ்திஸ்ஸ்வரரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.
கடந்த 9 ம் தேதியில் இருந்து பக்தர்கள் அனுமதிக்க திட்டமிட்டு இருந்த நிலையில் கோவில் அர்ச்சகருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது இதனால் பக்தர்கள் அனுமதிக்கபடாமல் இருந்து வந்தது.
தற்போது அதிகாரிகளின் உத்தரவை அடுத்து ஞானப்பிரசுனாம்பிகை சமேத காளஹஸ்திவேஸ்வர சுவாமிக்கு இன்று காலை சாந்தி அபிஷேகம் நடத்தப்பட்டது. 17 ஆம் தேதி முதல் பொது தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதே நாள் முதல் ராகு-கேது சர்ப தோஷ நிவாரண பூஜை தொடங்குகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. காய்ச்சல், ஜலதோஷம், இருமல் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம்.
கோயிலுக்கு வரும் அனைவரும் ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி எண்ணை கொண்டு வர வேண்டும். பொது மக்கள் பிக்சல காலி கோபுரம், சிவயகோபுரம் மற்றும் தெற்கு வாயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 300 முதல் 500 பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோயிலின் ஐந்து ராகு-கேது மண்டபங்களில், முன்பு சராசரியாக 950 பக்தர்கள் வழிபடப்பட்டனர். தற்போது ராம-கேது மண்டபத்தில் 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்கப்படும். கோயிலின் தீர்த்தம், சடாரி ஆசீர்வாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
Leave a Comment