சூரிய கிரகணம் - திருப்பதியில் ஜூன் 21 தரிசனம் ரத்து....
சூரிய கிரகணத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது.
ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை காலை 10.18 மணி முதல் பிற்பகல் 1.38 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. இதனால் ஏழுமலையான் கோயிலில் 20 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் கோயில் கதவுகள் மூடப்பட உள்ளது.
ஜூன் 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு மாலை 6 மணி வரை சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று செய்ய உள்ளனர்.
இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை ஏகாந்த சேவையுடன் கோயில் மூடப்படுகிறது. எனவே ஜூன் 21 அன்று ஏழுமலையான் கோயிலை பக்தர்களுக்கு அன்றைய தினம் முழவதும் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் கோயிலில் பக்தர்களை கல்யாண உற்சவ சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிரகணத்தின் போது தரிகொண்டா வெங்கமாம்ப அன்னபிரசாத பவன் மற்றும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் போன்ற எந்தப் இடங்களிலும் அன்னப்பிரசாதம் வழங்கபடாது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Comment