திருப்பதியில் பக்தர்கள் சாமி தரிசனம்....
ஏழுமலையான் கோவிலில் 79 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் வருகையை அடுத்து கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 79 நாட்களுக்கு பிறகு இன்று முதல் அனுமதி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்டமாக தேவஸ்தானத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்களின் குடும்பத்தினர் 6000 பேர் என இன்றும் நாளையும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதைதொடர்ந்து.
புதன்கிழமை அன்று திருமலையில் வசிக்கும் உள்ளூர் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு. பதினோராம் தேதி வியாழக்கிழமை முதல் பொதுமக்களுக்கு ஏழுமலையான் தரிசனம் கிடைக்க உள்ளது. இதற்காக இன்று காலை முதல் தேவஸ்தான இணையதள வெப்சைட் மூலம் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். வெளிமாநில பக்தர்கள் ஆந்திர மாநில அரசின் மூலம் வழங்கப்படும் மாநில எல்லையில் நுழைவதற்கான இ பாஸ் கட்டாயம் பெறவேண்டும்.
தரிசனத்திற்கு செல்லும் வைகுண்டம் காத்திருப்பு அறை, அன்னப் பிரசாத கூடம், தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா உள்ளிட்ட இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். ஆங்காங்கே கிருமிநாசினி வைக்கப்பட்டு சுத்தம் செய்த பின்னர் அனுமதிக்கப்படுகிறது. கை கழுவுவதற்கு குழாய்களின் மீது கைகளை வைக்காமல் கால்களில் அழுத்தினால் தண்ணீர் வரும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Leave a Comment