சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது
சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9 ஆம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதித்து அதற்கன வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.
இதனையடுத்து வரும் 9 ஆம் தேதி முதல் கேரளாவில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கோயில்களின் அளவைப்பொறுத்து பக்கதர்களை அனுமதிப்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து. அதாவது 100 சதுர மீட்டருக்கு 15 நபர்கள் மட்டுமே 6 அடி இடைவெளியுடன் நிற்க வேண்டும். அதிகபட்சமாக 100 பக்தர்கள் மேல் கோயில் வளாகத்துக்குள் யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே நேரத்தில் 50 பக்தர்கள் மேல் அனுமதி்க்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Comment