திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது எப்படி? தேவஸ்தானம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்.... 


திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் கண்டிப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். 

திருமலைக்கு வரும் பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு வழியாக நடந்து மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பக்தர்கள் மாஸ்க் அணிந்து வருவதுடன் கிருமினாசினியும் எடுத்து வரவேண்டும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

காலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதி வழங்கப்படும். 

ஒரு மணி நேரத்தில் 500 பக்தர்கள் ஏழுமலையானை வழிபடலாம். 

பிரதான தெய்வமான ஏழுமலையான் தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வகுலமாதா, பாஸ்யாகருலா சன்னிதி, யோகநரசிம்ம சுவாமி தரிசனம் கிடையாது. 

பக்தர்கள் சுவாமி புஷ்கரினியில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். தீர்த்தம் மற்றும் சதாரி எதுவும் வழங்கப்படாது.

உண்டியல் துணி மூலம் வைரஸ் பரவாமல் தடுக்க பக்தர்களுக்கு ஸ்ரீவாரி உண்டி அருகே மூலிகை கை சுத்திகரிப்பாளர்கள் வழங்கப்படுவார்கள்.

உண்டியலை தொடாமல் பக்தர்கள் திருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்த வேண்டும். 

ஆந்திர அரசு நிபந்தனைகளின்படி திருமலையில் சமூக இடைவெளியை பின்பற்றுதல் பக்தர்கள் அதிக அளவில் நடமாடும் இடங்களில் கிருமிநாசினி தெளித்தல் தரிசன வரிசைகள் தடுப்பு வேலிகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தல் முகக் கவசம் சானிடைசர் பயன்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

வரும் 11ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் 3,000 தரிசன டிக்கெட்டுகளும், திருப்பாதி கவுண்டர்களில் 3,000 டிக்கெட்டுகளும் வழங்கப்படும். காலை 6.30 முதல் இரவு 7.30 வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் திருப்பதி வர அனுமதியில்லை.



Leave a Comment