சிம்ம ராசிக்கு லாபம் தர போகும் ஜூன் மாதம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
இந்த மாதம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு அதிக மதிப்பு இருக்கும். உங்கள் மீதான அக்கறை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். என்றாலும் செலவுகள் சற்று அதிகரித்து காணப்படும். நீதிமனறத்தில் வழக்குகள் ஏதேனும் இருப்பின் அதில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வண்டி, வாகனங்களுக்காக புதிய முயற்சி செய்வோர் புதிதாக வாங்கலாம். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வதற்கு வாய்ப்புள்ளது. மொத்தத்தில் முன்னேற்றம் உண்டு.
புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். எதிர்பார்த்த லாபமும், விற்பனையும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடப்பதால் மனதிற்கு திருப்தி ஏற்படும்.
உத்தியோகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைப்பதால் உங்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.
பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். பணிக்குச் செல்லும் பெண்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.
மாணவமணிகளுக்கு நன்மைகள் நடக்கும். சிலர் எதிர்பார்த்த விசயங்கள் கை கூடி வரும்.
அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். எதையும் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. கடின உழைப்பும் நேர்மையான போக்கும் உங்களைக் காக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை கவனமுடன் ஏற்றுக் கொள்ளலாம். உடனிருப்போருடன் முக்கிய முடிவுகளைப் பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டாம்.
மகம்:
இந்த மாதம் கணவன், மனைவியிடையே அன்பும், பாசமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள். தாயாருடன் இருந்து வந்த மனக்கசப்பு மறையும்.
பூரம்:
இந்த மாதம் மனைவி வழியில் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் ஒப்பந்தங்கள் நிறை வேறும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
உத்திரம் 1 :
இந்த மாதம் உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி மாறும். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் குறையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் வேலையில் மனநிம்மதி உண்டாகலாம்
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் - சனி
பரிகாரம்: சித்தர்கள் சமாதி சென்று வழிபட்டு வரவும்.
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Mobile/WhatsApp: +91 7845119542
Leave a Comment