கோயில்களில் ஜூன் 1 ஆம் தேதி முதல் இ-பாஸ் மூலம் பக்தர்கள் அனுமதி?
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கு முக்கிய கோயில்களில் ஆன்லைன் வாயிலாக இ-பாஸ் கொடுத்து பக்தர்களை அனுமதிக்க தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுபடுத்தும் வகையில் கோயில்களுக்கு பக்தர்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த பிறப்பித்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை ஜூன் 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஜூன் 1 ஆம் தேதிக்கு பிறகு கோயில்களில் தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் திறக்க அரசிடம் அனுமதி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மாநிலம் முழுவதும் முக்கிய கோயில்களில் ஆன்லைன் மூலம் பாஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 500 பேர் வீதம் கோயில்களில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள், அந்த பாஸில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் தான் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
அரசு அனுமதி கிடைத்தவுடன் திருப்பதி போன்று முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு பாஸ் வழங்கப்படுகிறது. கொரோனா பிரச்னை முடிவுக்கு வரும் வரை இந்த நிலை தொடரும் என்று கூறப்படுகிறது.
Leave a Comment