பிறனில் விழையாமை - ஒருவன் அறநெறியில் நிற்காமல் (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் 
பெண்மை நயவாமை நன்று 
மு.வ விளக்க உரை: 
ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது 
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது. 
கலைஞர் விளக்க உரை: 
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.



Leave a Comment