பிறனில் விழையாமை - பிறன்மனை நோக்காத பேராண்மை (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் 
கறனென்றோ ஆன்ற வொழுக்கு 
மு.வ விளக்க உரை: 
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும். 
சாலமன் பாப்பையா விளக்க உரை: 
அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும் 
கலைஞர் விளக்க உரை: 
வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்



Leave a Comment