ஒழுக்கம் உடைமை - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறமாட்டார்கள் (தினம் ஒரு திருக்குறள்)


குறள் :
ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்
மு.வ விளக்க உரை:
தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.
கலைஞர் விளக்க உரை:
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்



Leave a Comment