ஒழுக்கம் உடைமை - தீயொழுக்கம் தீராத துன்பம் தரும் (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும் 
மு.வ விளக்க உரை: 
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும். 
சாலமன் பாப்பையா விளக்க உரை: 
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும். 
கலைஞர் விளக்க உரை:
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்



Leave a Comment