விருச்சிக ராசிக்கு மே மாதம் ராசி பலன் 


விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கும் விருச்சிக ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சுகஸ்தானத்திற்கு மாறுகிறார். வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரிய தடை நீங்கும்.  எதுவும் நடக்காமல் இழுபறியாக இருந்த சொத்து சம்பந்தமான காரியங்கள் அகலும். மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.


தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.
குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும்.

பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.     
பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.  
அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.


கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள். 

விசாகம்:
இந்த மாதம் ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க  முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். அரசாங்க வேலைகளும் அனுகூலமாக இருக்கும். சகோதரர்களுக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

அனுஷம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. சகோதரருக்கு திருமணம் முடியும்.குடும்பத்தில் சின்னசின்னப் பிரச்சனைகள் தோன்றி மறையும். விட்டுக் கொடுத்து நன்மையைப் பெறுங்கள்.  

கேட்டை:
இந்த மாதம் குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும்.  கணவன் மனைவிக்கிடையே  இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது பங்குதாரர் இணைவார் எதிர்பார்த்த லாபம் வரும். புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.

பரிகாரம்:  வேல் மாறல் பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
Mobile/WhatsApp: +91 7845119542
 



Leave a Comment