ஒழுக்கம் உடைமை - கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.  (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் 
ஏதம் படுபாக் கறிந்து 
மு.வ விளக்க உரை: 
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர். 
சாலமன் பாப்பையா விளக்க உரை: 
ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார். 
கலைஞர் விளக்க உரை: 
மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்



Leave a Comment