ஒழுக்கம் உடைமை - ஒழுக்கம் உடையவராக வாழ்வதே (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் 
இழிந்த பிறப்பாய் விடும் 
மு.வ விளக்க உரை: 
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும். 
சாலமன் பாப்பையா விளக்க உரை: 
தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும். 
கலைஞர் விளக்க உரை: 
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்



Leave a Comment