ஒழுக்கம் உடைமை - ஒழுக்கமே உயிரை விடச் சிறந்தது (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும் 
மு.வ விளக்க உரை: 
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும். 
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.
கலைஞர் விளக்க உரை: 
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது



Leave a Comment