மந்திரங்களின் தாயான காயத்ரி


மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணா பரமாத்மா கூறியிருப்பதன் மூலம் நம்மால் காயத்ரி மந்திரத்தின் மகிமையை உணர்ந்துகொள்ள முடிகிறது . மந்திரங்களுக்கெல்லாம் தாயாக விளங்குவது காயத்ரி மந்திரம் . மகரிஷி விசுவாமித்திரரால் மக்களுக்கு சொல்லப்பட்டது தான் மகிமை வாய்ந்த இந்த காயத்ரி மந்திரம் .

காயத்ரி மந்திரம்:
ஓம் பூர் புவஸ்ஸூவ

தத் சவிதுர்வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோ ந: ப்ரசோதயாத்|

 காயத்ரி மந்திரத்தின் விளக்கம்:

பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

24 அட்சரங்களைக் கொண்ட காயத்ரி மந்திரதை  தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும் என்றும் ஜபிப்பவர்களுக்கு அளவற்ற சக்தியையும்  , வைராக்கியத்தையும் தரும் என்பது நம்பிக்கை .

 சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்களால் போற்றப்படும் காயத்ரி மந்திரம் ,காலையில்  காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டிலும்  காயத்ரிக்குத் தான் முதல் இடம்.
 
ஒரு முறை பிரம்மா புஷ்கரம் என்ற புண்ணிய சேக்திரத்தில் ஒரு யாகத்தை தொடங்கினார் . அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதி வராததால் , பிரம்மா தனத்து சக்தியின் பயனால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்டித்தார்.காயத்ரி தேவியை நாமகளின் அம்சமாக கொண்டு நான்முகன் தனத்து யாகத்தை நிறைவு செய்தார்  என்கிறது புராணம் .  செந்தாமரையில் எழுந்தருளிய அன்னை ஐந்து திருமுகங்களும் பத்து கரங்களும் கொண்டு அழகே உருவாக திகழ்கிறாள் .
 



Leave a Comment