திருப்பதியில் மே 3 வரை தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் மே 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டன.
வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களின் தரிசனம் நிறுத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.அனைத்து வகையான தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டதால், ஏழுமலையானை தரிசிக்க பக்தா்களுக்கு ஏப்.14-ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு உத்திரவை மே 3ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளதால், ஏழுமலையான் தரிசனத்தை அப்போது வரை ரத்து செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை தெரிவித்துள்ளது.
Leave a Comment