சித்திரை விசு கனி பூஜைக்காக சபரிமலை சன்னிதானம்  திறப்பு..!! 


சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ கனி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.கொரோனா அச்சுறுத்தலால் பங்குனி ஆராட்டு திருவிழா ரத்து செய்யப்பட்டது. சித்திரை மாத பூஜையை பக்தர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

பிரசித்தி பெற்ற விஷுக்கனி பூஜையானது காலை 5 மணி அளவில் தலைமை தந்திரி அவர்களின் முன்னிலையில் நடைபெறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஏற்கனவே தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் சம்பிரதாய முறைப்படி மட்டுமே பூஜைகள் நடைபெறும் 18 தேதி இரவு வரை நடைபெறும்.

நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், களபாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படிபூஜை, சகஸ்ரகலசம், புஷ்பாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.குறைவான ஊழியர்கள் மட்டும் வருவார்கள். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பூஜைகளுக்காக நடை திறந்திருக்கும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.
 



Leave a Comment