அடக்கம் உடைமை - மலையின் உயர்வை விட பெரியது எது? (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது 
மு.வ விளக்க உரை: 
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும். 
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது. 
கலைஞர் விளக்க உரை: 
உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்



Leave a Comment