அடக்கம் உடைமை - அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் 
தாற்றின் அடங்கப் பெறின் 
மு.வ உரை: அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும். சாலமன் பாப்பையா உரை: 
அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும். 
கலைஞர் உரை: 
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்



Leave a Comment