குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ...சோமவார வழிபாடு!
வாரங்களில் திங்கட்கிழமையை குறிக்கும் சொல்லுக்கு சோமவாரம் என்று பெயர். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது பெருஞ் சிறப்புக்குரியது. சோம என்பதற்கு பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்.
சாபத்தின் காரணமாக நோயில் விழுந்த சந்திரன், தன் சாபமும், நோயும் நீங்க சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். அதன் பயனாக அவன் நோய் நீங்கப்பெற்றான். மேலும் நவக்கிரகங்களில் ஒருவராகும் வாய்ப்பையும் பெற்றான். அவன் பெயரில் உருவானதே சோமவார விரதமாகும்.
இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், துன்பங்கள், பாவங்கள் விலகுவதுடன், நல்ல வாழ்க்கைத் துணையையும் பெறுவார்கள். இந்து சமய திருமணங்களில் அருந்ததி பார்ப்பது என்று ஒரு நிகழ்வு உண்டு. கற்புக்கரசியான அந்த அருந்ததி தேவியை வசிஷ்ட முனிவர் தன் வாழ்க்கைத் துணைவியாக பெற்றது, சோமவார விரதத்தின் வாயிலாகத்தான். எனவே பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து நல்ல வாழ்க்கைத் துணையை அடையலாம்.
இந்த நல்ல நாளில் சிவபெருமான் நாமத்தை உச்சரித்து மாலை வேளையில் சிவாலயம் சென்று சிவனை தரிசித்தால். குடும்ப பிரச்சனைகள் தீர்ந்து மனதில் சந்தோஷம் நிலவும். சவாலயம் செல்ல இயலாதவர்கள். வீட்டிலேயே சிவப்பெருமான் படத்திற்கு பூஜை செய்து வணங்கினால். சிவனின் பூரண ஆசிர்வாதம் கிட்டும்.
Leave a Comment