கண் திருஷ்டி நீங்க என்ன செய்ய வேண்டும்!


கண் திருஷ்டி நீங்க என்ன செய்ய வேண்டும்!
கல்லடி பட்டாலும் கண்ணடி நம்மீது படக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். அந்த கண்ணடியைத்தான் திருஷ்டி என்பார்கள், மற்றவர்கள் நம்மை பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு, அதனால் பாதிப்பு ஏற்பட்டால் கண் திருஷ்டி பட்டுவிட்டது என்று சொல்வார்கள். கண் திருஷ்டி நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம்…
வீட்டின் வெளிப்புற வாசலில் வடக்கு திசையை பார்த்து ஒரு திருஷ்டி விநாயகர் படத்தை மாட்டிவையுங்கள்.
இவ்வாறு கண் திருஷ்டி விநாயகர் படத்தை மாட்டிவைப்பதினால், மற்றவர்கள் நம்மீது வைக்கும் பார்வைகளில் இருந்து நம்மை திருஷ்டி விநாயகர் காப்பார்.
வருடத்திற்கு ஒரு முறை தங்கள் வீட்டில் கணபதி ஹோமம் செய்யுங்கள் அல்லது எங்காவது கணபதி ஹோமம் செய்யப்பட்டிருந்தாலும், அங்கு சென்று அந்த ஹோமத்தில் சாம்பல் சிறிதளவு எடுத்து வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் முடிந்து வைத்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதினால் எப்படி பட்ட திருஷ்டியாக இருந்தாலும் பறந்தோடிவிடும்.
வீட்டில் துளசி மற்றும் அரும்புகள் போன்ற செடிகளை வளர்ப்பதினாலும், கண் திருஷ்டி நீங்கும் மற்றும் தீய அதிர்வுகளும் நீங்கி விடும். அதேபோல் செவ்வாய் கிழமைகளில் வீட்டின் தலை வாயில்களில் மாவிலையை தோரணமாக கட்டி தொங்கவிடுங்கள். இதுவும் ஒரு சிறந்த திருஷ்டி பரிகாரமாகும்.
அதேபோல் வீட்டில் தலை வாசலின் மேல்பகுதியில் படிகாரம் கல்லை கருப்பு நிறம் கயிற்றில் கட்டி தொங்கவிடவும். இவ்வாறு செய்வதினால் வீட்டின் மீது படும் வெளிநபர்களின் கண் திருஷ்டி அகன்றுவிடும்.
அமாவாசை, பௌணர்மி போன்ற தினங்களில் உச்சி வேளையில் வீட்டிற்கு திருஷ்டி கழிக்க வேண்டும். திருஷ்டி கழித்த பிறகு வீட்டின் எல்லா பகுதியிலும் வேப்பிலையை கொண்டு மஞ்சள் நீர் தெளிக்க வேண்டும்.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னிரவு வேளையில் மிளகாய், உப்பு மற்றும் உங்கள் வீடு மற்றும் தொழிற்கூட நிலத்தின் மண் ஆகியவற்றை ஒன்றாக ஒரு கொட்டாங்குச்சியில் போட்டு, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் திருஷ்டி கழித்து தெரு முச்சந்தியில் அப்பொருட்களை தீயிட்டு கொழுத்த வேண்டும். இதன் மூலம் கண் திருஷ்டி கழியும்.



Leave a Comment