சனி பகவானைக் கண்டு பயப்பட வேண்டுமா!
சனி பகவானைக் கண்டு பயப்பட வேண்டுமா!
நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம். இருப்பினும் சனி பகவானை குறித்து சில உண்மைகளை அறிந்துகொள்ளும் போது அவர் மீது எழும் தேவையற்ற பயம் மாறி பக்தி பெருகும்.
ஆயுள்காரகன் என்றும் போற்றப்படுவர் சனிபகவான். அவர் கருணையினாலேயே ஒருவர் நீடித்த ஆயுளைப் பெறமுடியும்.முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பல பலன்களை தந்து, நம் பாவ சுமையினை கலைப்பவர்.
ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருக்கிறார் என்றால், நாட்டுக்கே தலைவராகும் யோகம் கிடைக்கும். அந்நிய மொழிகளில் புலமை, விஞ்ஞானத்தில் அதிக தேர்ச்சி, மருத்துவ துறையில் புகழ், ஆகியன சனிபகவானின் அருள்பார்வையால் கிடைக்கும்.
கருமை நிற மேனியுடையவர், கருப்பு வஸ்திரம் அணிபவர், சனிக்கிழமைகளில் கோயில்களுக்கு சென்று சனிக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி வழிபட நோய்களில் இருந்து விடுபடலாம்.
காக்கை, எருமை ஆகியவை இவரது வாகனம், சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காக்கைக்கு சாதமிட்டுப்பின் உண்பதன் மூலம் கெடுபலன்கள் குறையும், நற்பலன்கள் பெருகும்.
சனிக்கிழமைதோறும் விரதம் கடைபிடிப்பது நன்று. சிவன் கோயிலில் உள்ள நவக்கிரக சந்நிதியில் இருக்கும் சனீஸ்வரருக்கு, மாலையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது. எள் – எண்ணெயில் தீபம் ஏற்றுவதன் மூலம் வறுமை நீங்கும். செல்வம் பெருகும்.
சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கும் ஊனமுற்றோர்களுக்கும் அன்னதானம், ஆடைதானம் மற்றும் பணம் வழங்குவதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.
Leave a Comment