நடுவு நிலைமை- ஒருவர் நேர்மையானவரா என்பது (தினம் ஒரு திருக்குறள்)
குறள்:
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்
மு.வ விளக்க உரை:
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.
கலைஞர் விளக்க உரை:
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்
Leave a Comment