செய்ந்நன்றியறிதல் - தம் துன்பத்தைப் போக்கியவரின் (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் 
விழுமந் துடைத்தவர் நட்பு 

மு.வ விளக்க உரை: 
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை: 
தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர். 

கலைஞர் விளக்க உரை: 
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது

 



Leave a Comment