கடவுளை எப்படி வணங்க வேண்டும்?


கடவுளை எப்படி வணங்க வேண்டும்?
இன்றைய அவசர  காலத்தில் கோவிலுக்கு செல்ல கூட நேரம் ஒதுக்காமல் பார்த்த இடத்தில் கடவுளை வணங்கி விட்டு செல்கிறோம். ஆனால் கடவுளை வணங்கும் முறையில் பல சாஸ்திர சம்பிரதாயங்களை நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு எப்படி வழிபட வேண்டும் என்பது தெரியவில்லை. அதை நாம் பின்பற்ற கற்றுக் கொள்ள வேண்டும். எனவே அதை பற்றிய சில ஆன்மிக தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்:

மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

வீட்டு பூஜையில் கற்பூரதீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்து கை, கால்கள் கழுவலாம். குளிக்கக் கூடாது.

எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோவிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. அதுவே மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது.

இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.



Leave a Comment