செய்ந்நன்றியறிதல் - பண்பைப் பொருத்தே மதிப்பிடப்படும் (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
உதவி வரைத்தன் றுதவி உதவி 
செயப்பட்டார் சால்பின் வரைத்து

மு.வ விளக்க உரை: 
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை: 
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும். 

கலைஞர் விளக்க உரை: 
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்

 



Leave a Comment