கபாலீசுவரர் கோயிலில் மார்ச் 29 பங்குனி திருவிழா கொடியேற்றம்....
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மார்ச் 29 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய திருவிழாவான தேர்திருவிழா ஏப்ரல் 4 ஆம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல், இரவு நேரங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவில் ஏப்ரல் 5-ந்தேதி மாலை 3 மணிக்கு அறுபத்து மூவர் திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி காலை திருஞானசம்பந்தர் எழுந்தருள, பூம்பாவை உயிர்பெற்று எழுகின்ற நிகழ்ச்சி நடக்கிறது.
மாலையில் அறுபத்துமூவர் விழாவையொட்டி விநாயகர் முன்செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்களுடன் கபாலீசுவரர்- கற்பகாம்பாள், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும், சண்டிகேசருடன் மாட வீதிகளில் வலம் வருகின்றனர்.
அவர்களுடன் திருவள்ளுவர், வாசுகி, முண்டககண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் என பலரும் சேர்ந்து கொண்டு வீதி உலா வருகின்றனர்.
தொடர்ந்து 7-ந்தேதி திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
Leave a Comment