திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்வோர் கவனத்திற்கு....
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைனில் ரூ 300 டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசன நாட்களை மாற்றிக் கொள்ளும் விதமாகவும் அல்லது ரத்து செய்யும் விதமாக சாஃப்ட்வேரில் மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்து இருக்கிறார்.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி என்று மூத்த அதிகாரிகளுடன் கோடைகால ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தர்மா ரெட்டி கோடை காலம் தொடங்கிய நிலையில் பக்தர்களுக்கு வெயில் தாக்கம் தெரியாத வகையில் பக்தர்கள் அதிக அளவில் காலணிகள் அணியாமல் நடந்து செல்லக்கூடிய பகுதிகளில் சாலையில் கூலிங் பெயிண்ட் வாரத்திற்கு ஒரு முறை அடிக்கப்பட உள்ளது.
மேலும் பக்தர்கள் அதிக அளவில் இருக்கக்கூடிய கோவிலின் எதிரே உள்பட முக்கிய பகுதிகளில் தற்காலிக நிழற்ப்பந்தல் அமைக்கப்படும். கோடைக்கால விடுமுறையை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வரக்கூடிய மே மற்றும் ஜூன் மாதங்களில் 1 வயது குழந்தையுடன் பெற்றோர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட உள்ளது. பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்ப லட்டு பிரசாதம் தயார் செய்து தட்டுப்பாடு இல்லாமல் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் 300 காண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் 3 மாதத்திற்கு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இங்கு வருவதற்கு தயக்கம் உள்ள பக்தர்கள் அந்த டிக்கெட்டுகளை வேறு நாட்களுக்கு மாற்றிக் கொள்ளவோ அல்லது ரத்து செய்து கொள்வதற்கு தற்போது வரை ஆன்லைனில் வசதிகள் இல்லை. அந்த வசதியை இன்னும் ஓரிரு நாட்களில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 300 ரூபாய் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வருவதற்கு தயக்கம் இருந்தால் தங்கள் பயணத்தை மாற்றிக்கொள்ளலாம். திருமலையில் முற்றிலும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் செம்பு மற்றும் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்து திருமலையில் 150 இடங்களில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு மையத்தில் தண்ணீரை பிடித்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
Leave a Comment