இனியவை நாற்பது - பிறர்க்கு நன்மை தரும் (தினம் ஒரு திருக்குறள்)


குறள்: 
    அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
    நாடி இனிய சொலின் 

மு.வ விளக்க உரை: 
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து  பெருகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை: 
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும். 

கலைஞர் விளக்க உரை: 
தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்



Leave a Comment